வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (14:56 IST)

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தேதி இதுதான்.. இந்தியாவில் தெரியுமா?

eclipse
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
பூமி, நிலா சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளை சூரிய கிரகணம் என்று கூறுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று நிகழும் என்றும் ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் முழுமையான சூரிய கிரகணத்தை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி நிகழும் என்றும் இதனை அடுத்த சூரிய கிரகணம் அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை நிகழும் என்றும் இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசியா பசுபிக் பெருங்கடல் அண்டார்டிகா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள எக்ஸ் மவுத் என்ற பகுதியில் முழு சூரிய கிரகணம் தெரியும் என்பதால் அங்கு பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva