வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (12:00 IST)

சோமாலியா: மார்க்கெட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

சோமாலியா மாகாணத்தில் உள்ள மொகடிஷீயில் உள்ள மார்க்கெட்டில் பயங்கராவதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
 
சோமலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதராவளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்தி வருகின்றனர்.
 
அந்த வகையில் நேற்று இந்த பயங்கரவாதிகள் மொகடிஷுவில் அருகில் உள்ள லாயென் நகரில் இயங்கிவரும் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
ஏற்கனவே கடந்த மாதம் அல் ஷபாப் பயங்கராவதிகள் மொகடிஷு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.