வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (08:06 IST)

ஒரே நாளில் 448 பேர்களுக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சியி இங்கிலாந்து அரசு

இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நானூற்று நாற்பத்தி எட்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே 800க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் நானூற்று நாற்பத்தி எட்டு பேருக்கும் ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அந்நாட்டில் மொத்தம் ஆயிரத்து 265 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.