1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (07:34 IST)

ஆஷஷ் தொடரில் 425 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட் 152

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மிக அபாரமாக 152 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தற்போது 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணி 255 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆத்திரேலிய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.