1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (15:10 IST)

பாகிஸ்தான் மனித வெடிகுண்டு தாக்குதல் 44 பேர் உயிரிழப்பு

blast
பாகிஸ்தான் நாட்டில்  மனித வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்   நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் ஜே.யு.ஐ.எஃப் சார்பில்  இஸ்லலாமிய அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது, திடீரென்றறு குண்டுவெடிப்பு  ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானதாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போதைய பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்,  17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், படுகாயமடைந்துள்ளவர்களை பெஷாவர் மற்றும் டைமர்கெராவில்  உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.