1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:01 IST)

இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில் புதிதாக நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. 

 
இலங்கை பிரதமர் ராஜபக்ச நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது என்பதும் அந்த தகவலுக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
புதிய அமைச்சர் நியமனம் செய்யப்படுவார்களா? அல்லது இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது குறித்த தகவல் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
 
இந்நிலையில் இலங்கையில் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. அதன்படி நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடமும் கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும் நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக, இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.