புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (10:28 IST)

1980களில் 200 ரூபா கடன்: மளிகை கடைக்காரரை தேடி ரோடு ரோடா அலைந்த கென்யா எம்பி!!

யாரிபாரி சாச்சே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கென்ய எம்பி ரிச்சர்ட் டோங்கி தான் வாங்கிய கடனை அடைக்க மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். 
 
30 ஆண்டுக்களுக்கு முன் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் ரிச்சர்ட் டோங்கி. அப்போது அருகில் இருந்த மளிகை கடைக்காரரிடம் அவ்வப்போது கடன் வாங்குதும் அதை திருப்பி கொடுப்பதுமாக இருந்துள்ளார். 
 
கடைசியாக வரிடம் ரூ.200 கடன் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பி கொடுக்காமல் படிப்பை முடித்துவிட்டு கென்யா திரும்பியுள்ளார். எனவே இப்போது அந்த ரூ.200 திரும்பி கொடுக்க தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். 
 
இந்தியா வந்து தனக்கு கடன் கொடுத்த மளிகைக் கடைக்காரரை அவுரங்காபாத்தில் தேடி அலைந்துள்ளார். பின்னர் அவர் வீட்டை கண்டுபிடித்து வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்துவிட்டு மளிகைக் கடைக்காரரின் குடும்பத்தினருக்கு கென்யா வரும்படி அழைப்பும் விடுத்துவிட்டு சென்றுள்ளார்.