திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (13:50 IST)

பிச்சைக்காரரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை அபகரித்த காங்கிரஸ் பிரமுகர்: போலீஸ் வலைவீச்சு..!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பிச்சைக்காரரை அடித்து தாக்கி அவரிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தை அபகரித்து சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 
 
கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை என்ற பகுதியில் 8 ஆண்டுகளாக ராமன் ஜி என்பவர் பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு போக சேமித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மது போதையில் மூன்று வாலிபர்கள் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி 20 ஆயிரம் பணத்தை அபகரித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போது காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்தான் இந்த செயலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அந்த பிரமுகரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பிச்சைக்காரரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பணத்தை அபகரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva