வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:12 IST)

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு- 3 பேர் பலி

அமெரிக்க நாட்டில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர்  தன் மனைவி உள்ளிட்ட 3 பேரை  துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அடிக்கடி, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள   நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும்  பிரபலமான மதுபான விடுதி  ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு, தினமும்  நூற்றுக்கணக்கான மக்கள் வந்து மதுபானம் பருகுவது வாடிக்கை. இந்த நிலையில்,  நேற்று இரவு 7 மணியளவில் இங்கு வந்த  நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதுபற்றித் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஓய்வு பெற்ற  போலீஸ் அதிகாரி என்றும், தன்னைவிட்டுப் பிரிந்துபோன மனைவியைக் குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகிறது.