1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: புதன், 24 மே 2023 (20:47 IST)

காவல் அதிகாரியின் காரை எட்டி உதைத்த விஷால் பட நடிகை...போலீஸார் விசாரணை

dimple hayathi
தெலுங்கு சினிமாவில் பிரபல  நடிகையான டிம்பிள் ஹயாதி கடந்த 2017 ஆம் ஆண்டு கல்ஃப் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின்னர் தமிழில் தேவி2 அப்னிஹேத்ரி, கில்லாடி,. யுரேகா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவர் ஐதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதே குடியிருப்பில்  மாநகர போக்குவரத்து ஆணையர் ராகுல் ஹெக்டே வசிக்கிறார்.இங்கு, கார் பார்கிங்கில் கார்களை நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், டிம்பிள் ஹயாதியின் வருங்கால கணவர் , ராகுல் ஹெக்டேவின் கார் மீது டிம்பிள் ஹயாதியின் காரை மோதவிட்டுள்ளார்.

அத்துடன் ராகுல் ஹெக்டேவின் காரை டிம்பிள் ஹயாதே எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ராகுல் ஹெக்டே நடிகை டிம்பிள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் டிம்பிள் ஹயாதியை  அழைத்து விசாரணை  நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.