திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (14:30 IST)

மேலாடையின்றி அதிபர் ஜோ பைடன் முன்பு நின்ற திருநங்கை...

rose
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்பு மேலாடையின்றி சென்ற திருநங்கை வழக்கறிஞருக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு, பிரைட் மாத கொண்டாட்டத்தின்போது, மேலாடையின்றி காட்சியளிக்கும் ஒரு வீடியோவை ரோஸ் மோன்டோயா என்ற திரு நங்கை ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனை அவர் சந்தித்ததாகவும், அதன்பின்னர், ஜோ பைடனும் கை குழுக்குவதாகவும், பின், அவர் வெள்ளை மாளிகையின் முன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக வீடியோவில் உள்ளது.

இந்த நிலையில், அதிபர் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பீயர், ''இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் டிரான்ஸ் வக்கீல் ரோஸ் மோன்டோயா உட்பட தகாத நடத்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இது, குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று கூறியுள்ளார்.