செவ்வாய், 7 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

பாமகவுக்கு 10, தேமுதிகவுக்கு 8.. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை ஆரம்பமா?

பாமகவுக்கு 10, தேமுதிகவுக்கு 8.. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை ஆரம்பமா?
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ரகசியமாக தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது.
 
 கடந்த சில தேர்தல்களாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை இம்முறை திமுக தனது அணிக்கு கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பாமக தரப்பில் 15 இடங்கள் கேட்கப்பட்டாலும், திமுக 10 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
 
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு பிரேமலதா தலைமையில் இயங்கும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க திமுக ஆர்வம் காட்டி வருகிறது. அவர்களுக்கு 8 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்கத் தயாராகி வருவதால், வாக்குகளைச் சிதறவிடாமல் இருக்க இந்த இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் வைத்திருக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva