அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி!
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதன் 4 வது அலை பரவி வருகிறது.
இந்த நிலையில்,, உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
,கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு பின் , கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது,
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போது ஜில் பைடனுக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறது. அவர் விரைவில் குணமடைய மக்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.