1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (10:02 IST)

எங்கே பார்த்தாலும் இந்தியர்கள் இருக்கின்றார்கள்: ஆத்திரத்தில் அமெரிக்க பெண் செய்த செயல்!

US woman
எங்கே பார்த்தாலும் இந்தியர்கள் இருக்கின்றார்கள்: ஆத்திரத்தில் அமெரிக்க பெண் செய்த செயல்!
எங்கே பார்த்தாலும் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்று ஆத்திரத்தில் அமெரிக்க பெண் ஒருவர் இந்திய பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் இந்திய பெண்களை அமெரிக்க பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி உள்ளார். இதனை அடுத்து அவர் போலீசாரால் பிடிபட்டபோது நான் இந்தியர்களை வெறுக்கிறேன், இந்த இந்தியர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ அமெரிக்காவுக்கு வருகிறார்கள். இந்தியர்கள் எங்கே பார்த்தாலும் இருக்கிறார்கள். இவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை
 
எனவே இந்தியாவுக்கு அனைவரும் திரும்பிச் செல்லுங்கள் என்று பேசினார். இதனை அடுத்து தாக்குதல் நடத்திய அமெரிக்க பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.