1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (20:51 IST)

பாகிஸ்தானில் ஓடும் பேருந்தில் தீ விபத்து....குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் பலி

pakistan
பாகிஸ்தான் நாட்டின் நூரியாபாத் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில், திடீரென்று தீப்பிடித்ததில், குழ்ந்தைகள் உள்ளிட்ட 21 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டில் சபாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்  ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில், இங்கு மழைபெய்து வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இருந்து, கராச்சியில் முகாமிட்டு அங்கு தங்கவைகபப்ட்டனர். இவர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு பேருந்தில் திரும்பினர்.

எனவே, நூரியா பாத் என்ற பகுதியில்   நேற்று நள்ளிரவில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்பேருந்தில், 60 பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. சுதாரித்துக் கொண்ட   ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அதற்குள்,வேகமாகத் தீப்பிடித்தது.

சில பயணிகள் பேருந்தின் ஜன்னல் வழியே, கண்ணாடிகளை உடைத்தும் கொண்டு வெளியேறினர். ஆனால்,பேருந்தைவிட்டு வெளியேற முடியாத  குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் தீயில் சிக்கி பலியாகினர். மேலும்,,40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 Edited by Sinoj