அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போராட்டத்தில் இறங்கும் பலரையும் காவல்துறை கைது செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிமுக, பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடந்த முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அரசின் இந்த போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது?
போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்து விடுவதால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K