1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 200 refugees dead by drowing in sea

கடலில் மூழ்கி 200 அகதிகள் பலி!!

கடலில் மூழ்கி
சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுகின்றனர். 


 
 
உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலர் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர்.
 
இந்நிலையில் அகதிகள் படகுகளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களது படகு மத்திய தரைக்கடலில் லிபியா அருகே வந்து கொண்டிருந்த போது 2 படகுகள் கடலில் மூழ்கின.
 
அந்த படகுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகுகளில் இருந்து 5 பேரை பிணமாக மீட்டனர்.
 
மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சீன பொருட்கள் மீதான எண்ணத்தை மாற்றிய சியோமி