மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் பலி
ஜப்பானில் மாடர்னா தடுப்பூசியின் 2 ஆம் தவணையை செலுத்திக் கொண்ட இருவர் பலி.
தடுப்பூசி மருந்துக் குப்பிகளில் கலப்படம் இருப்பதாகக் கூறி ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 16.3 லட்சம் டோஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. 5.6 லட்சம் தடுப்பூசி மருந்து குப்பிகளைக் கொண்ட ஒரு பேட்சில் சில டோஸ்களில் மருந்து அல்லாத வேறு கலப்பட பொருள்கள் (ஃபாரின் ஆப்ஜக்ட்ஸ்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் கூறியது.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். ஆம், இந்த தடுப்பூசியின் 2 ஆம் தவணையை செலுத்திக்கொண்ட 30 வயது மதிக்கத்தக்க இருவர் மரணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.