திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:47 IST)

உலகின் மிக அழுக்கான மனிதன் அமவ் ஹாஜி உயிரிழந்தார்!

amou haji
60 ஆண்டுகளுக்கு மேல் குளிக்காமல் இருந்த உலகின் மிக அழுக்கான மனிதன்  அமவ் ஹாஜி(94)  என்ற  முதியவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 

இந்த உலகில்  நாள்தோறும் ஆச்சர்யமான விஷயங்களும்,  நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றனர். திறமையை நிரூபித்து ஒரு புறம் சாதிக்கத் துடிப்பவர்கள் இருந்தாலும், தங்களின் விநோதமான செயல்களுக்காவே உலகின் வெளிச்சத்திற்கு வருபவர்களும் உள்ளனர்.

அந்தவகையில், ஈரான் நாட்டைச் சேர்ந்த   அமோ ஹஜி என்ற முதிய்வர்  கடந்திய 65 ஆண்டுகளாக ஒரு சொட்டு கூட  நீர் தன் உடலி படாமல் வாழ்ந்து வந்தார். இவருக்கு நீரைக் கண்டால் அச்சம் என்ற  நிலையில் நீரில் குளித்தால்  நோய் வந்துவிடும் என்ற பயத்தில்  அமோ ஹாஜியை(94) சில மாதங்களுக்கு முன் கிராமத்தினர் குளிப்பட்டியுள்ளனர்.

இந்த  நிலையில், அமோ உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
Edited by Sinoj