1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 17 storey building accident in Iran

17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஈரானில் கோரவிபத்து!!

ஈரான்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிளாஸ்டிக் கம்பெனியின் தலைமை அலுவலகம் உள்ள 17 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது. 


 
 
நேற்று காலை 8 மணி அளவில் இந்த கட்டிடத்தில் திடீரென பிடித்துக் கொண்ட தீ அத்தனை மாடிகளுக்கும் பரவியது.
 
தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் படை வீரர்கள், ராட்சத கிரேன்களுடன் உடனடியாக அந்த கட்டிடத்திற்கு விரைந்தனர்.
 
நாலாபுறமும், கிரேன்களில் இருந்தவாறு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து சரிந்தது. 
 
அந்த இடிபாடுகள் தீயணைக்கும் வீரர்கள் இருந்த கிரேன்கள் மீது விழுந்தன. இதில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 38 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் : பணிந்த உச்ச நீதிமன்றம்