டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம்
டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்க வர்த்தக ஆணையம் டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆதாயம் பெறும் நோக்கில் விளம்பர நிறுவனங்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு பகிர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
டுவிட்டர் நிறுவனத்தின் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் விற்பனைக்கு செய்யப்பட்டிருப்பது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது