புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (12:20 IST)

துருக்கி நிலநடுக்கம்: 131 கட்டிட ஒப்பந்ததாரர்கள் கைது..!

turkey
துருக்கி நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 30,000 பேர் பலியாகி இருக்கும் நிலையில் பூகம்பத்தை தாங்கும் அளவுக்கு கட்டிடங்கள் கட்டாத கட்டிட ஒப்பந்ததாரர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
துருக்கியின் கட்டுமான விதிகளின் படி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கான அளவில் பொறியியல் தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமல் கட்டியதால் தான் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது என்றும் ஆயிரக்கணக்கான உயிர் இழப்புக்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. 
 
எனவே நிலநடக்கத்தை தாங்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டாத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய அந்நாட்டுத் துணை அதிபர் வாரண்ட் பிறப்பித்த நிலையில் இதுவரை 131 ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran