1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (19:56 IST)

ரூ. 12 கோடி மதிப்புள்ள மதுபானம்...

scotch whiskey
உலகில் பெரும்பாலான நாடுகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாதாரண மதுபானம் முதல் சர்வதேச மதுபானம் வரை பல வகைகளில் பல விலைகளில் இந்த மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகில் மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் ஸ்காட்ச் விஸ்கியான Macalllan Adami 1926  என்ற பிராண்டில் 96 ஆண்டு கால பழமையான மதுபானம்   ஏலத்திற்கு வரவுள்ளது.

இந்த மதுபாட்டில் வரும் நவம்பர் மாதம் ஏலத்திற்கு வரவுள்ளது. இந்த பாட்டில் ரூ.12 கோடிவரை ஏலம் போக வாய்ப்புள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு மதுபாட்டில் ரூ.13 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது