1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (21:28 IST)

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகள் நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக 100 செயலிகள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசின் உத்தரவின் பேரில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட செயலிகள் அனைத்தும் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து அதனை தவறாக பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இதுகுறித்து மத்திய அரசு அளித்த தகவலின் பேரில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான காலகட்டத்தில் 100 செயலிகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது மேலும் இதே போன்று இன்னும் சில செயலிகள் இருப்பதாகவும் இந்த செயலிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வேண்டும் என்றும் இல்லையேல் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது