1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (18:38 IST)

அரசை விமர்சித்து எழுதியவருக்கு 10 ஆண்டு சிறை

வியட்நாமில் அரசை விமர்சித்து வலைப்பூவில் எழுதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
வியட்நாமைச் சேர்ந்த குயன் காக் ஹூ குயாங் (Nguyen Ngoc Nhu Quynh) வயது (45),  என்பவர் 
அந்நாட்டின் பொருளாதாரம், லஞ்சம், அரசியல் கொள்கைகள், மனித உரிமை, மூன்றாம் 
பாலினத்தவருக்கான உரிமைகள் குறித்து தனது வலைப்பூவில் விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அரசை விமர்சனம் செய்ததால் 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து ஹா தரங் (Nha Trang) நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் குயாங் மனு தாக்கல் செய்தார். ஆனால் வியட்நாமிய சட்டப்படி குயாங் குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் குயன் காக் ஹூ குயாங், தாம் கைது செய்யப்படுவது முன்கூட்டியே தெரியும் என்றும் ஆனால் இதற்கு பயந்து தன் கருத்தை வெளிப்படுதாமல் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.