செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:25 IST)

ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம்: என்ன ஆச்சு பூமிக்கு?

டிசம்பர் மாதம் வந்தாலே கூடவே பயமும் வந்துவிடும். பெரும்பாலான இயற்கை பேரிடர், அழிவுகள் டிசம்பரில்தான் நடந்துள்ளது. இந்த நிலையில் இன்றுதான் டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. அதற்குள் மனிதர்களை பயமுறுத்துவதை போல இன்று ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா, சிலி நாட்டில் உள்ள வால்பரைசோ, தென்கிழக்கு இந்தியன் ரிட்ஜ் பகுதியில் உள்ள கடலிலும், நியூ கலிடோனியாவில் உள்ள டாடின் என்ற பகுதியிஉம், மெக்சிகோவை சேர்ந்த பாரெடான் என்ற பகுதியிலும், இரான் நாட்டில் கெர்மான் என்ற பகுதியிலும் இன்று ஒரே நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே டிசம்பர் மாதத்தில் சென்னையில் சுனாமி வரும் என்று வதந்திகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஏற்படும் நிலநடுக்கங்களை பார்த்தால் , அந்த வதந்தி நிஜமாகிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.