வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (08:03 IST)

ஒரே நாளில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா: உலக நாடுகள் அதிர்ச்சி

இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா தொற்று புதியதாக பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உலகம் முழுக்க 13,035,942 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
மேலும் உலகம் முழுக்க கொரோனாவிலிருந்து 7,582,035 பேர் மீண்டனர் என்பதும் உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கி 571,571 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகில் அதிகமான அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனாவால் மொத்தம் 3,413,995 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அமெரிக்காவில் கொரோனாவால் 137,782 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசிலில் கொரோனாவால் மொத்தம் 1,866,176 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் பிரேசிலில் கொரோனாவால் 72,151பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 879,466 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்தியாவில் கொரோனாவால் 23,187 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யாவில் கொரோனாவால் மொத்தம் 727,162 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பெருவில் கொரோனாவால் மொத்தம் 326,326 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், சிலி நாட்டில் கொரோனாவால் மொத்தம் 315,041 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஸ்பெயினில் கொரோனாவால் மொத்தம் 300,988 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது