திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (07:25 IST)

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: உலகிலேயே முதல்முறையாக மனிதர்கள் மீது சோதனை செய்து ரஷ்யா

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்து வருகிறது என்பது தெரிந்ததே இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகில் உள்ள பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் இதற்காக மில்லியன் கணக்கான டாலர்கள் செலவு செய்யப்பட்டு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கொரனோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மனிதர்கள் மீதான சோதனை முடிவுக்கு வந்துள்ளது என ரஷ்யா அறிவித்துள்ளது 
 
முழுமையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக வெளிவந்த தகவல் மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான தகவல் ஆகும். உலகிலேயே முதல்முறையாக கொரோனா தடுப்பு மருந்தை சோதனையை ரஷ்யா செய்துள்ளதாக மாஸ்கோ ஸ்டேட் யுனிவர்சிட்டி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளது
 
எங்கள் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும் மனிதர்களுக்கு இது எந்தவித பின் விளைவையும் ஏற்படுத்தாது என்றும் இதனால் கொரோனா வைரஸை உலகில் இருந்து முற்றிலும் ஒழித்து விடலாம் என்றும் மாஸ்கோ ஸ்டேட் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதனை செய்து வெற்றி பெற்று விட்டால் இன்னும் ஒரு சில மாதங்களில் உலகிலிருந்தே கொரோனாவை விரட்டி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது