திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (13:04 IST)

உனக்கென்ன சத்யஜித்ரேன்னு நினைப்பா? தடைகளை தாண்டி சிறந்த இயக்குனர் விருதை வென்ற அனுபர்னா ராய்!

anuparna roy

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை இந்தியாவை சேர்ந்த பெண் இயக்குனர் பெற்றிருப்பது மொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்று வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா. இந்த ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் பல படங்கள் திரையிடப்பட்ட நிலையில் விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறந்த இயக்குனருக்கான விருதை மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் இயக்குனர் அனுபர்னா ராய் அவர் இயக்கிய Songs of Forgotten Trees திரைப்படத்திற்காக பெற்றார்.

 

அதை தொடர்ந்து மொத்த சினிமா உலகின் பார்வை அனுபர்னா ராய் பக்கம் திரும்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் நாராயண்பூர் கிராமத்தில் பிறந்த அனுபர்னா அங்குள்ள தொடக்க பள்ளியில் படித்து சாதாரணமாக வளர்ந்தவர். படித்து முடித்து ஐடி துறையில் வேலை பார்த்த அவர் திரைப்படங்கள் மீதான பிரியத்தால் வேலையை விட்டுவிட்டு படம் எடுக்க இறங்கியுள்ளார்.

 

அனுபர்னாவின் இந்த நடவடிக்கைகளால் கோபமான அவரது அப்பா பிரம்மானந்தா “எதற்காக உனக்கு வேண்டாத வேலை, படம் எடுக்கப் போகிறாயா? உனக்கு சத்யஜித்ரே என நினைப்பா?” என்று திட்டியுள்ளார். ஆனால் தனது ஆர்வத்தில் உறுதியாக இருந்த அனுபர்னா மும்பையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார். பல்வேறு கஷ்டங்களை கடந்து அவர் எடுத்த இந்த படத்திற்காக உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

 

Edit by Prasanth.K