திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: புதன், 16 நவம்பர் 2016 (11:39 IST)

கலவை காய்கறி மசாலா

தேவையான பொருட்கள்:
 
காரட் - 100 கிராம்
உருளை - 150 கிராம்
காலிஃப்ளவர் - ஒன்று
பச்சை மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

 
செய்முறை:
 
அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும். எண்ணெய் சூடானதும் சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 
வாசனை போகும் வரை வதக்கி வேகவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அரைத்துவைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும். மசாலா காய்கறியில் நன்கு பரவியதும் இறக்கி பரிமாறவும்.