புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (10:34 IST)

சூப்பரான சுவையில் காராமணி வடை செய்ய !!

Karamani Vadai
தேவையான பொருட்கள்:

வெள்ளைக் காராமணி - 1 கப்
வரமிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை:

முதலில் காராமணியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன், வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான சுவையில் காராமணி வடை தயார்.