சுவையான பீட்ரூட் வடை செய்ய...!!
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது
கறிவேப்பிலை - தேவையானவை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பையும், கடலை பருப்பையும் நன்கு கழுவி தனித்தனி பவுலில் போட்டு 1 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஊறிய பிறகு காய்ந்த மிளகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கல் உப்பு,சோம்பு இவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து விட வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பருப்பு நன்கு அரை படாமல் சற்று கொரகொரப்பாக இருக்க வேண்டும். அரைத்த பின் மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், சிறிதாக நறுக்கிய 2 பச்சை மிளகு, ஒரு துண்டு இஞ்சி நறுக்கியது, பீட்ரூட் 1 துருவியது மற்றும் கறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது இவை அனைத்தையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக விட வேண்டும். பின் இந்த வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டி அடுப்பிலிருக்கும் காய்ந்த எண்ணெயில் போட்டு வடையை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான, மொறுமொறுப்பான பீட்ரூட் வடை தயார்.