செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஆரோக்கியம் தரும் காய்கறி பிரியாணி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - தலா ஒன்று
புதினா
தயிர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டீஸ்பூன்
தக்காளி - 3
பச்சைப் பட்டாணி
பீன்ஸ் எல்லாம் சேர்த்து - ஒரு கப்
கேரட் - 1 நறுக்கிய 
உருளைக்கிழங்கு - 1
பாஸ்மதி அரிசி - 250 கிராம்

செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில். பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். சுவையான காய்கறி பிரியாணி தயார்.