செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (21:33 IST)

மாதவிடாய் காலத்தில் சமையல் செய்யும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் ! - சுவாமி குருஷ்னஸ்வரப் சர்ச்சை பேச்சு

மாதவிடாய் காலத்தில் சமையல் செய்யும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் ! - சுவாமி குருஷ்னஸ்வரப் சர்ச்சை பேச்சு


 
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குருஷனஸ்வரப் தாஸ்ஜிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள், கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் எழுந்ததால், 60 மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது என சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது.
 
அதனையடுத்து, அக்கல்லூரியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யபட்டார். இப்படியிருக்க, இக்கல்லூரியின் மதபோதரான குருஷ்னஷ்வரப் தாஸ்கி என்பவர் பேசிய ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.