1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (15:58 IST)

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - வேப்பம் பூ ரசம் !!

Veppam poo Rasam
தேவையான பொருட்கள்:

காய்ந்த வேப்பம் பூ - 1 கைப்பிடி
நாட்டு தக்காளி - 1
புளிக்கரைசல் - 2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பசு நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு



செய்முறை:

முதலில் வேப்பம் பூவை சிறிதளவு பசு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் பசு நெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து காய்ந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து புளியை கரைத்து அதில் தக்காளி பிழிந்து விட்டு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம் பூ ரசம் தயார்.