செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு சூப் செய்ய...!

உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம். அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுதான் முதலிடம். 
கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு,கொள்ளு சூப் ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.  சளியும் காணாமல் போகும்.
 
தேவையான பொருள்கள்:
 
கொள்ளு - 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2


 
செய்முறை:
 
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்). அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். 

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன்  கொத்தமல்லித் தழை தூவி பறிமாறலாம். சுவையான, உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு சூப் தயார்.