செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (18:05 IST)

இவ்னிங் ஸ்நாக்ஸ்: ப்ரெட் மஞ்சூரியன்....

தேவையான பொருட்கள்:
பிரெட் - 6
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
குடை மிளகாய் - 1
சோள மாவு, மைதா - ஒரு ஸ்பூன் 
வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகாய்த் தூள்/ பெப்பர் - ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
1. பிரெட் துண்டுகளை தேவையான அளவு சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.
 
2. சோள மாவு, மைதா மாவு, சிறிது உப்பு ஆகியவற்றை தண்ணிர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
 
3. இந்த மாவில் ப்ரெட் துண்டுகளை நனைத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியாக வைத்துகொள்ளவும். 
 
4. வெங்காயம், வெங்காயத்தாள், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாகவும், குடை மிளகாயை சிறிது பெரிதாகவும், தக்காளியை அரைத்தும் வைத்துகொள்ளவும்.
 
5. பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
6. வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள்/பெப்பர், சோயா சாஸ் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். 
 
7. பின்னர் பொரித்து வைத்துள்ள பிரெட் துண்டுகளைப் போட்டு ட்ரைய் ஆகும் வரை கிளரவும். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.