வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

காளான் வறுவல் செய்முறை...!

தேவையான பொருட்கள்:
 
காளான் - அரை கிலோ
வெங்காயம் - 1
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை: 
 
காளானை சுத்தம் செய்து துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். பொதுவாக வறுவல் செய்யும்போது காளானை கழுவினால் அதில் உள்ள ஈரப்பதம் குறைவதில்லை. அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வறுக்கும்போது மொறுமொறுப்பாக இருக்காது.
 
காளானை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
கடுகு வெடித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அடுத்து காளானை சேர்த்து குறைந்த தீயில் 6 நிமிடங்கள் அல்லது தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
 
உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். சில சமயங்களில் கால் கப் குடைமிளகாய் சேர்க்கலாம். மேலும் 5 நிமிடங்கள் நன்கு வதக்கி அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறலாம். சுவையான காளான் வறுவல் தயார்.