முருங்கைப்பூ பொரியல் செய்ய...!

Sasikala|
தேவைப்படும் பொருட்கள்:
 
முருங்கைப்பூ - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 தே.க
மஞ்சள் பொடி - ¼ தே.க அல்லது சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் கொஞ்சம்  எண்ணெய் விட்டு அரைத்த விழுதை மஞ்சள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் முருங்கைப்பூ, ¼ கப்  தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வேகவைத்து இறக்கினால் சுவையான முருங்கைப்பூ பொரியல்  தயார்.
 
-மங்களமேரி


இதில் மேலும் படிக்கவும் :