வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

வயிற்று புண்களை சரிசெய்யும் மணத்தக்காளிக் கீரைத் துவையல்...!

மண‌த்த‌க்கா‌ளியை பொ‌ரி‌த்தோ அ‌ல்லது கடை‌ந்தோ சா‌ப்‌பி‌ட்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள். இது துவைய‌ல் செ‌ய்யு‌ம் முறை, செய்து பாருங்கள்  சுவையாக இருக்கும்.

 
தேவையான பொருட்கள்:
 
மணத்தக்காளிக் கீரை - 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 10
புளி - சிறு நெல்லிக்காயளவு
உப்பு - ருசிக்கேற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

 
செய்முறை:
 
கீரையை நன்றாகக் கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பி‌ன்ன‌ர் சிகப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் சிறிது நல்லெண்ணெயில் வறுத்து எடுக்கவும்.
 
வறுத்த பொருட்களுடன் வதக்கிய கீரை, ஊறவைத்த புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு இத்துவையலைக் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றிற்கு நல்லது.