வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவை மிகுந்த பன்னீர் டிக்கா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2/ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பன்னீர் - 250 கிராம்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூம்
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
குடை மிளகாய் - 2 சதுரமாக நறுக்கியது
வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கியது
தக்காளி - 1 சதுரமாக நறுக்கியது
மூங்கில் குச்சி - தேவையான அளவு.
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து  கொள்ளவும்.
 
பின்பு கடலை மாவு சேர்த்து அதனுடன் சதுர வடிவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை 1/2 மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து சிறிய மூங்கில் குச்சிகளை கொண்டு சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சொருகி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
 
பின்னர் தோசை கல்லை வைத்து நன்றாக சூடானதும் குச்சியில் சொருகி வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவைக்க வேண்டும். இவ்வாறு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா  தயார்.