புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (14:36 IST)

சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்த விநோத திருடர்கள்

ஒரு திருட்டு கும்பல், தான் திருடச் சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டுவிட்டு பின் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

வாணியம்பாடி சென்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஃபாரூக். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஃபாரூக்கின் வீட்டுக்கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.

இது குறித்து ஃபாரூக்கிற்கு உடனே தகவல் கூறினர். இதன் பின்பு ஃபாரூக்கின் உறவினர்கள் வீட்டுற்குள் சென்று பார்த்தபோது, அறையின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 பவுன் நகைகளும், 5 லட்சம் பணமும் திருடுப்போனது தெரியவந்தது.

மேலும் திருடிய கும்பல், சமயலறையில் மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.