வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

வீட்டிலேயே எளிமையாக முறையில் பானி பூரி செய்ய !!

பூரிக்கு தேவையான பொருட்கள்:
 
ரவை - 1/2 கப்
மைதா - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
 
பானிக்கு தேவையான பொருட்கள்:
 
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2-3
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 லிட்டர்
 
மசாலாசெய்ய தேவையான பொருட்கள்: 
 
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
 
முதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு பொடி செய்து கொண்டு, பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் 1 1/2 லிட்டர் நீரில் ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து, நீரை வடித்து, அந்த நீரில் அரைத்து வைத்துள்ள மல்லி பேஸ்ட், மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு மைதா, ரவை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, மாங்காய் தூள், ப்ளாக் சால்ட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 
அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால், பானி பூரி தயார்.