செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த பாசிப்பருப்பு பாயாசம் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பாசிப் பருப்பு  - 1 கப்
துறுவிய வெல்லம்  - 1 கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - வறுக்க
தேங்காய் பால் - 2 கப்

செய்முறை:
 
பருப்பை சூடான வாணலியில் பொன்நிறமாக  வறுத்துக் கொள்ளவும். சூடான நீரைச் சேர்த்து பருப்பு நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.
 
துருவிய வெல்லம் சேர்த்து கலந்து வெல்லம் முழுவதும் கரையும் வரை வேக விடவேண்டும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்து  வைக்கவேண்டும். அடுப்பிலிருந்து  இறக்கி வைத்த பின்னர் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.