அற்புதமான சுவையில் பாலக் பன்னீர் கிரேவி செய்ய !!
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் - தேவையான அளவு
பால் - 1/2 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
பசலைக்கீரை/பாலக் - 4 கப் (நறுக்கியது)
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 3 துண்டு
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5-7 நிமிடம் நன்கு கீரையை வேக வைக்கவேண்டும். பின் அதனை இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி, அரைத்து வைத்துள்ள கீரை கலவையை ஊற்றி, கிரேவி அதிகம் வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
இறுதியில் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் சில நிமிடங்கள் வேக வைக்கவும். அடுத்து பாலில் சோள மாவு சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், அற்புதமான சுவையில் பாலக் பன்னீர் கிரேவி தயார்.