வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

சமையல் அறையை அமைத்துக்கொள்வதில் உள்ள வசதிகளும் வாஸ்து முறைகளும் !!

இன்றளவிலும் அக்னிமூலை எனப்படும் தென்கிழக்கிலேயே சமையலறை அமைக்கும் முறையை கடைப்பிடிக்கிறோம்.


மேலும் கதகதப்பாக உள்ள அறையில்  கிருமிகள் பரவாது என்பதால் உணவும் உணவுப் பொருட்களும் பாதுகாப்பாக இருக்கும் என்ற விஞ்ஞான அடிப்படையிலும் இருப்பது நோக்கதக்கதாகும்.
 
சமையல் அறையில் சமையல் செய்யும் மேடையை இரண்டு அல்லது இரண்டேகால் அடி அகலத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட மேடை வடக்கு சுவரை  தொடாமல் 6 அங்குலம் இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். ஏனெனில் ஈசானியத்தில் மேடை அமைக்கும்போது பாரம் அதிகமாகி பல சிரமங்களைத்  எதிர்கொள்ள வேண்டிவரும்.
 
கிழக்கு போலவே, இந்த மேடையை தெற்கிலும், மேற்கிலும் அமைத்துக்கொள்ளலாம். சிங்க் எனப்படும் பாத்திரங்கள் கழுவும் பகுதியை தெற்கு சுவரில் தென்மேற்கு  பகுதியில் அமைக்க வேண்டும். 
 
தெற்கு திசையில் சிங்க் அமைக்கும் போது சமையல் பாத்திரங்களை கழுவி வைப்பதும் அதை தென்மேற்கில் அடுக்கி வைப்பதும் சரியான நடைமுறையாகவும்;  வசதியாகவும் இருக்கும்.
 
சிலர் வடகிழக்கில் ‘தண்ணீர்’ வேண்டும் என்ற கருத்தில் அமைப்பார்கள். இது தவறு. தண்ணீர் என்பது ஈசான்யத்தில் நிலத்திற்கு கீழே இருப்பது தான் நல்லது.
 
சமையலறையில் எக்காரணம் கொண்டும் மின்சார ஸ்விட்சுகளை அமைக்காமல் சமையலறைக்கு உள்ளே செல்லும்போது வாசலுக்கு அருகே உள்ள சுவரின்  வெளிப்புறத்தில் அமைத்தால் மின்கசிவு ஏற்பட்டு கேஸில் தீப்பற்றக்கூடிய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.
 
மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை தெற்கு, மேற்கிலும் குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை வடக்கு/கிழக்கு சுவரிலும் அமைத்துக்கொள்வதால் வசதியும் கூடும்; வாஸ்து  சாஸ்திரமும் முறையாகப் பின்பற்றப்படும்.