1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (16:35 IST)

உடலுக்கு ஆரோக்கியம் தரும் திணை அரிசி அடை செய்ய !!

Thinai adai
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
தினை அரிசி - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:

திணை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் முதல் நாள் இரவே ஒன்றாகவே ஊறவைத்துவிடவும். மறுநாள் ஊறிய திணை அரிசி பாசிபருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

பின் கலந்து வைத்துள்ள மாவை கனமான தோசைகளாக வார்த்து நன்கு சிவந்த பின் எடுத்து பரிமாறினால் சுவையான திணை அடை தயார்.