1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. Make Easy and Delicious Aval Kesari !!

எளிதான மற்றும் சுவை மிகுந்த அவல் கேசரி செய்ய !!

Aval Kesari
தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
முந்திரி - 15
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்



செய்முறை:

அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் கமகம சுவை மிகுந்த அவல் கேசரி தயார்.
அடுத்த கட்டுரையில்
பல முக்கியமான வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் கிராம்பு !!