சுவையான இனிப்பு குழிப் பணியாரம் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
பச்சரிசி - 2 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி
சின்ன ஜவ்வரிசி - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 1/4 மூடி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
 
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற  வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு, ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.
 
உப்பு சேர்த்து கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும். வெல்லத்தைப் பொடியாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து அல்லது பாகு பதத்தில் கரைத்து, வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். துருவிய தேங்காய் மாவில் கொட்டி நன்கு கலக்கவும். சிறிதளவு ஏலக்காய் போட்டு கலக்கவும்.
 
குழி பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, பாதி குழி அளவிற்கு மாவு ஊற்றி, மூடி வைத்து, திருப்பி வேக விட்டு எடுக்கவும். சுவையான இனிப்பு குழிப்  பணியாரம் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :