சுவையான சுண்டைக்காய் குழம்பு செய்ய !!
தேவையான பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய்
சின்ன வெங்காயம் - தலா ஒரு கப்
தேங்காய் துண்டுகள் - 2
பூண்டு - 2 பல்
கீறிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
குழம்பு பொடி - 2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி (காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்), சுண்டைக்காய் வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.